வாருங்கள் என் உறவுகளே!
இனிக்கும் இன்பக் கவிகள் வேண்டுமா?
இல்லைக் கண்ணீர்க் கவிதைகள்தான் வேண்டுமா?
எது வேண்டுமானாலும் எடுத்துச் சுவையுங்கள்!
..................................
இறுதி மூச்சு!
பனிப்பட்ட பசும்புல் !
ஆசையுடன் நான் வளர்க்கும்
எழில் கொஞ்சும் புது ரோசா
காத்திருக்கும் அவள் முகத்தை
நினைவூட்டி என்னைக் கலங்க வைக்கும் !.
முற்றத்தில் பூத்திருக்கும்
மல்லிகையின் நறு மணமோ – அவள்
நல்லாடை நறுமணமாய்
எனை மயங்கச் செய்து விடும் !
வைர வெண்பனித் துளிகள்
நிலம் மேவி மறைத்திருக்க
இலையுதிர் காலந்தனில்
சீதளத் தென்றலினூடே
உனக்காகக் காத்திருந்தேன்!
ஒரு நாளும் வரவில்லை!
பனிப்பட்ட பசும் புல்லாய்
என் இதயம் நலியுதிங்கே..!
.....................................
இறுதி மூச்சு!
மண்ணை முத்தமிடும்
மலையின் இரகசியத்தை
மோதிவந்த நதியொன்று
முரசொலித்து கூறியது!
நிழலழகை தான் இரசித்தே
நீள்உவகை கொண்டதன்றோ
நீரில் முகம் பார்த்த
நீலநிற வானமங்கே!
முகிற்கூட்டம் மோதியதால்
மலைமுகடு சிதறியதோ!
மலைசார்ந்த நிலமெங்கும்
மணிப்பரல்கள் உருண்டனவே!
தென்றலெனும் தேரினிலே
தேடிவந்த வண்டினமோ
தேவதையின் இதழ்களிலே
தேனருந்திப் போயினவே!
கனவுகள் கலைந்தபின்னும்
காரிகையாள் தேடுகிறாள்
காற்றினிலே இறுதிமூச்சை
காணும்வரை வாடுகிறாள்!
................................
ஆசையுடன் நான் வளர்க்கும்
எழில் கொஞ்சும் புது ரோசா
காத்திருக்கும் அவள் முகத்தை
நினைவூட்டி என்னைக் கலங்க வைக்கும் !.
முற்றத்தில் பூத்திருக்கும்
மல்லிகையின் நறு மணமோ – அவள்
நல்லாடை நறுமணமாய்
எனை மயங்கச் செய்து விடும் !
வைர வெண்பனித் துளிகள்
நிலம் மேவி மறைத்திருக்க
இலையுதிர் காலந்தனில்
சீதளத் தென்றலினூடே
உனக்காகக் காத்திருந்தேன்!
ஒரு நாளும் வரவில்லை!
பனிப்பட்ட பசும் புல்லாய்
என் இதயம் நலியுதிங்கே..!
.....................................
வசந்தம்!
...............
வசந்தத்தின் மேனி யதை
பனி மூட்டம் மறைத்திருக்க
மலைச்சாரல் மென் காற்றோ
வீசிவந்து அதை விலக்கிவிடும்!
தொலைவிலிருந்து தொடர்ந்து வரும்
புள்ளினத்தின் பண் ணொலியோ
வசந்தப் புல்வெளியில் இவளை
இன்பம் குளிக்க வைக்கும்!
காத்திருந்தும் காதலன் வாராவிடில்
ஆத்திரத்தில் இவள் மனங் கலங்க
பார்த்திருக்கும் பறவைகளும் இவளை
மகிழ்விக்கப் பண்ணிசைக்கும்!
பசும் புற்செடி வெளியில்
இடை வளைத்து அசைந்தாடும்
எழில் பொங்கும் புது மலரும்
இவள் மனதை மகிழ்விக்கும்!
...............
வசந்தத்தின் மேனி யதை
பனி மூட்டம் மறைத்திருக்க
மலைச்சாரல் மென் காற்றோ
வீசிவந்து அதை விலக்கிவிடும்!
தொலைவிலிருந்து தொடர்ந்து வரும்
புள்ளினத்தின் பண் ணொலியோ
வசந்தப் புல்வெளியில் இவளை
இன்பம் குளிக்க வைக்கும்!
காத்திருந்தும் காதலன் வாராவிடில்
ஆத்திரத்தில் இவள் மனங் கலங்க
பார்த்திருக்கும் பறவைகளும் இவளை
மகிழ்விக்கப் பண்ணிசைக்கும்!
பசும் புற்செடி வெளியில்
இடை வளைத்து அசைந்தாடும்
எழில் பொங்கும் புது மலரும்
இவள் மனதை மகிழ்விக்கும்!
....................................................
நீலமலர்!
நீலமேகம் போல வந்த
நீல விழியாளைக் கண்ட அவன்
நீள விழிகளோ நீண்ட நேரம்
மீள மறந்து நின்றன இங்கே!
நீருண்ட நீல விழியோ!
நிழலுண்ட கார் குழலோ!
பொன் குளித்த மேனியிதோ!
சந்திரப் பிறை நுதலோ!
தாரகையாள் அழகைக் கண்டு
தாவு நீரக் கடலைப் போல
பொங்கிய அவன் ஆசைகளோ
அலையும் வண்டாயினவே!
..................................
மௌனம் பேசியதோ!
பிள்ளை வான் நிலா
வெள்ளைப் பால் கொடுக்க
பூமித் தாய் அதை
பூரிப்புடன் பருகினாள்!
சிவந்த தன் இதழ்களிலே
கனிந்த தேன் சந்தமுடனே
முல்லைச் சிரிப்பை மூடித் திறந்தே
வெள்ளைப் புறாவைத் தோளிற் சுமந்தே
மெல்லென அவன் அருகினில் வந்தாள்!
வானத் தெருவில் அகல்
விளக்குகள் எரிய பாவை அவளைப்
பார்த்த அவன் விழிகளோ
மீள மறுக்க அவர்கள்
மனச் மனவெளியில் மௌனம் பேசியது!
................................................
நினைவுப் பறவை!
நீல நெடு வானகத்தில்
நீந்து கின்ற வெண்ணிலவாய்
நீல விழியில் மை எழுதி
கோல மயில் என்னருகே வந்தாள்!
மாலை மயங்கும் வேளையிலே
வண்டு பாடும் சோலையிலே
மங்கை முகம் காண்கையிலே
உள்ளம் துள்ளியது உவகையிலே!
நிழலினைப் போல் அவள்
நீள் கூந்தல் ஆடக் கண்டு
நினை வெனும் பறவையோ
நெடு வானில் பறந்ததே!
................................
வசந்தகாலப் புதுவிடியல்!
வசந்தகாலப் புது விடியல்
இன்பராகம் இசைக்கையிலே
காலை நேரப் பனித்துளிகள்
கண் சிமிட்டிச் சிரித்தனவே!
அன்பைத் தேடி யலைந்த
அன்னப் பறவை யொன்று
அருகினிலே வந்ததனால்-என்
அகம் மகிழ்ந்து துள்ளியதே!
தென்றலது கானம் பாடிவர
நீரதை வானம் அனுப்பியதால்
வாட்டும் கோடை யதுகூட
வசந்த காலம் ஆனதன்றோ!
மீன் விழியும் மான் நடையும்
காரிகையாள் கார் குழலும்
விழி மேட்டினிலே அச்சமும்
அச்சடித்த வண்ணக் கவிதைகளோ!
வசந்தகாலப் புது விடியல்
இன்பராகம் இசைக்கையிலே
காலை நேரப் பனித்துளிகள்
கண் சிமிட்டிச் சிரித்தனவே!
அன்பைத் தேடி யலைந்த
அன்னப் பறவை யொன்று
அருகினிலே வந்ததனால்-என்
அகம் மகிழ்ந்து துள்ளியதே!
தென்றலது கானம் பாடிவர
நீரதை வானம் அனுப்பியதால்
வாட்டும் கோடை யதுகூட
வசந்த காலம் ஆனதன்றோ!
மீன் விழியும் மான் நடையும்
காரிகையாள் கார் குழலும்
விழி மேட்டினிலே அச்சமும்
அச்சடித்த வண்ணக் கவிதைகளோ!
.......................................
காதல் மெட்டுக்கள்!
இசை அமுதளிக்கும் வண்டாய்
எனைத் தேடியே நீ வந்தாய்!
பால்நிலா முகம்காட்டி
பனியிதழ் நீ விரித்தாய்!
கனவெனும் தே ரிழுத்து
கற்பனை வடம் பிடித்தாய்!
தேனதை வென்ற இனிப்பாய்
செந்தமிழ் கவிகள் தந்தாய்!
காதல் மெட்டுக்கள் பல பாடி
மலர் மொட்டுக்கள் நீ விரித்தாய்!
கோலமிட்ட புள்ளிகளாய்-எனை
சிறைப் படுத்தி தவிக்க வைத்தாய்!
..............................................
நம்பிக்கை விரல்!
நிலங்கள் பிரசவிக்கும் தை மாதமதில்
கருவானம் தண்ணீரை தந்து கொண்டிருக்க
சிற் றோடைகள் சிரித்து விளையாட
மலர்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தன!
குற்றாலத் தென்றல் போலே
என் காதோரம் ஒதுங்கிய
மாலை நேரக் காற்று
உன்னை நினைவு படுத்திச் சென்றது!
உன் பிரிவின் துயரால்
மனதின் அத்தி வாரத்திலிருந்து அழுகை வர
கண்கள் வழியே வெளியே வந்த நீரை
நம்பிக்கை விரல் சுண்டி எறிந்தது!
நிலங்கள் பிரசவிக்கும் தை மாதமதில்
கருவானம் தண்ணீரை தந்து கொண்டிருக்க
சிற் றோடைகள் சிரித்து விளையாட
மலர்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தன!
குற்றாலத் தென்றல் போலே
என் காதோரம் ஒதுங்கிய
மாலை நேரக் காற்று
உன்னை நினைவு படுத்திச் சென்றது!
உன் பிரிவின் துயரால்
மனதின் அத்தி வாரத்திலிருந்து அழுகை வர
கண்கள் வழியே வெளியே வந்த நீரை
நம்பிக்கை விரல் சுண்டி எறிந்தது!
....................................
மனதில் உதிர்ந்த மகரந்தம்!
அதிகாலையிலே வானம் பனித்துளி தூவ
தலையிலே அதனை மலர்கள் சுமக்க
காலையிலே உதித்த கதிரவன் அதை துவட்ட
சோலையிலே உன் வருகைக்காய் நான் தவமிருக்க
மாலையிலே முகம் காட்டி வரம் நீ தந்தாய்!
உந்தன் அருகாமை எனக்கு அமுதத்தை தர
புன்னகையின் வசீகரிப்பு மழையாய்
எந்தன் இதயத்தை நனைக்க
உந்தன் இமைகள் இரண்டின் நடுவே
நான் சிறைப்பட்டு துடித்தேன்!
எந்தன் மனதில் உதிர்ந்த மகரந்தமே!
இதய தடாகத்தில் பூத்த தாமரையே!
கலாபம் விரித்தாடும் கான மயிலே!
நாம் சந்தித்த பொழுதுகள் சர்க்கரையே! அந்த
வானத்தைப் போல் எம் காதலும் நிலையானதே!
அதிகாலையிலே வானம் பனித்துளி தூவ
தலையிலே அதனை மலர்கள் சுமக்க
காலையிலே உதித்த கதிரவன் அதை துவட்ட
சோலையிலே உன் வருகைக்காய் நான் தவமிருக்க
மாலையிலே முகம் காட்டி வரம் நீ தந்தாய்!
உந்தன் அருகாமை எனக்கு அமுதத்தை தர
புன்னகையின் வசீகரிப்பு மழையாய்
எந்தன் இதயத்தை நனைக்க
உந்தன் இமைகள் இரண்டின் நடுவே
நான் சிறைப்பட்டு துடித்தேன்!
எந்தன் மனதில் உதிர்ந்த மகரந்தமே!
இதய தடாகத்தில் பூத்த தாமரையே!
கலாபம் விரித்தாடும் கான மயிலே!
நாம் சந்தித்த பொழுதுகள் சர்க்கரையே! அந்த
வானத்தைப் போல் எம் காதலும் நிலையானதே!
...........................................................
இவை யிவள் அழகடியே!!
பொழில் தரு புது முகையே!
எழில் மிகு நறு மலரே!
ஒளி தரு தா ரகையே!
எழு கதிர் போல் சடையே!
முக மது முழு மதியே!
நுத லது திரி பிறையே!
உட லது பொன் நிறமே!
இடை யது மின் தொடியே!
அன் பது பொழி மழையே!
பேசு மொழி தேன் சுவையே!
விழி கூறு கதை அழகே!
இவை யிவள் அழ கடியே!
எழில் மிகு நறு மலரே!
ஒளி தரு தா ரகையே!
எழு கதிர் போல் சடையே!
முக மது முழு மதியே!
நுத லது திரி பிறையே!
உட லது பொன் நிறமே!
இடை யது மின் தொடியே!
அன் பது பொழி மழையே!
பேசு மொழி தேன் சுவையே!
விழி கூறு கதை அழகே!
இவை யிவள் அழ கடியே!
...................................
இன்பம் காண்போம்!!!
தேன் தமிழில் சொற்கள் தேடி
செந் தமிழில் கவிகள் பாடி
தேன் நிலவில் உன்னை நாடி
தேடி வந்தேன் விரைந் தோடி!
புள்ளி மானாய் துள்ளி ஓடி
தோகை மயிலாய் அசைந் தாடி
பூ விழிகள் தனை மூடி
பாவை நீ என் பக்கம் வாடி!
கார் குழலில் பூச் சூடி
கார் இருளில் ஒன்று கூடி
கா தோரம் கவிகள் பாடி
காண்போம் நாம் இன்பம் கோடி!
தேன் தமிழில் சொற்கள் தேடி
செந் தமிழில் கவிகள் பாடி
தேன் நிலவில் உன்னை நாடி
தேடி வந்தேன் விரைந் தோடி!
புள்ளி மானாய் துள்ளி ஓடி
தோகை மயிலாய் அசைந் தாடி
பூ விழிகள் தனை மூடி
பாவை நீ என் பக்கம் வாடி!
கார் குழலில் பூச் சூடி
கார் இருளில் ஒன்று கூடி
கா தோரம் கவிகள் பாடி
காண்போம் நாம் இன்பம் கோடி!
..........................................
அன்பிற்கு பஞ்சமில்லை!
தென்றலது தவழ்ந்து வர
சோலையது அசைந்து வர
தேன் வண்டு பாடி வர
உன் சுந்தர வதனம் காண
ஆசையுடன் ஓடி வந்தேன்!
காலையில் உதித்த கதிரவனை
மாலையில் காரிருள் சூழ்ந்து கலைக்க
சித்திரமாய் நான் சமைந்து நிற்க
கள்ளரைப் போலே மெல்லவே வந்து
கரம் பிடித்து இரு கண்களால் மயக்கி
கள்ளச் சிரிப்பாலே என்னை கொன்றாய்!
அள்ளி நீ சொரிந்த அன்பினாலே
துள்ளி மனம் குதித்தது கன்று போலே!
உந்தன் பெயரை நா உச்சரித்தாலே
எந்தன் கண்கள் கசிவ தேனோ!
அன்பினுக்கு உன்னிடத்தில் பஞ்சமில்லை!
எந்தனுக்கு உன்னையன்றி தஞ்சமில்லை!
தென்றலது தவழ்ந்து வர
சோலையது அசைந்து வர
தேன் வண்டு பாடி வர
உன் சுந்தர வதனம் காண
ஆசையுடன் ஓடி வந்தேன்!
காலையில் உதித்த கதிரவனை
மாலையில் காரிருள் சூழ்ந்து கலைக்க
சித்திரமாய் நான் சமைந்து நிற்க
கள்ளரைப் போலே மெல்லவே வந்து
கரம் பிடித்து இரு கண்களால் மயக்கி
கள்ளச் சிரிப்பாலே என்னை கொன்றாய்!
அள்ளி நீ சொரிந்த அன்பினாலே
துள்ளி மனம் குதித்தது கன்று போலே!
உந்தன் பெயரை நா உச்சரித்தாலே
எந்தன் கண்கள் கசிவ தேனோ!
அன்பினுக்கு உன்னிடத்தில் பஞ்சமில்லை!
எந்தனுக்கு உன்னையன்றி தஞ்சமில்லை!
தீப்பட்ட மூங்கில்!
கருவண்டு போல் நீ எந்தன்
சிந்தை யதைக் குடைந்ததனால்
நெஞ்சம் நெருப்பாற்றில் அமிழ்ந்தது! ஆதலால்
தீப்பட்ட மூங்கிலைப் போல் வெடித்தேன்!
உனை யாரென்று அறிந்த நாள் முதலாய்
அனைத்திற்கும் நீயே வேரென்று புரிந்திருந்தேன்!
விழிக் கதவுகளிற்கு தாளிடாமல் அவற்றை
திறந்து வைத்தே உனைப் பார்த்திருந்தேன்!
நான் தந்த அன்பு இன்றுனக்கு
நோய் தந்த கிருமி என்று
வாய் திறந்து நீ உரைப்பின்
மெய் வருந்தி தினம் வாடேனோ?
அன்று நான் வாழ்ந்த இதயத்தில்
இன்று இன்னொருவர் நுழைந்தாரோ?
இன்னொருவர் உள் நுழைந்தால்
எனதுயிரே அழியாதோ? இதை நீயும் அறியாயோ?
கருவண்டு போல் நீ எந்தன்
சிந்தை யதைக் குடைந்ததனால்
நெஞ்சம் நெருப்பாற்றில் அமிழ்ந்தது! ஆதலால்
தீப்பட்ட மூங்கிலைப் போல் வெடித்தேன்!
உனை யாரென்று அறிந்த நாள் முதலாய்
அனைத்திற்கும் நீயே வேரென்று புரிந்திருந்தேன்!
விழிக் கதவுகளிற்கு தாளிடாமல் அவற்றை
திறந்து வைத்தே உனைப் பார்த்திருந்தேன்!
நான் தந்த அன்பு இன்றுனக்கு
நோய் தந்த கிருமி என்று
வாய் திறந்து நீ உரைப்பின்
மெய் வருந்தி தினம் வாடேனோ?
அன்று நான் வாழ்ந்த இதயத்தில்
இன்று இன்னொருவர் நுழைந்தாரோ?
இன்னொருவர் உள் நுழைந்தால்
எனதுயிரே அழியாதோ? இதை நீயும் அறியாயோ?
.............................................
பண்டமாற்று!
ஒளி தரு பரிதி
காலைச் சுடாத காலைச் சூரியன்
உச்சிக்கு வந்து உச்சியை சுட்டு
மீண்டும் காலை சந்திப்பதாக
மாலையில் மண்ணகத்திற்கு
கை காட்டி விட்டு
மேற்றிசையில் மெல்ல மறைந்தான்!
அந்தி சாயும் நேரத்திலே
பாயும் நதிக்கரை யோரத்திலே
பறவையினம் இசை எழுப்ப
பனிமலர்கள் நடனமிட
நாத வண்டினங்கள் பண்ணிசைக்க
பனிமலர்கள் நடனமிட
நாத வண்டினங்கள் பண்ணிசைக்க
அவள் புன்னகையோ
கொத்துப் பூக்களாய் விரிய
கொத்துப் பூக்களாய் விரிய
சந்திரன் வந்து விளக்கேற்ற-அவள்
சுந்தர வதனம் கண்டு
தேவலோக மங்கையோ இவளென
தென்றலும் வியத்தது!
விடியாப் பொழுதில் -இரவு
முடியாப் பொழுதில்
அந்த வானமும் கண்ணுறங்க
நட்சத்திரங்கள் வந்து அணிவகுத்து நிற்க
நால்வகை நாணத்திற்கும்
நால்வகை நாணத்திற்கும்
அவள் விடுமுறை கொடுத்து விட
அவனும் அவளும்
ஒருவரை யொருவர் விழிகளால் விழுங்க
பார்வைகள் வழியே நடந்து முடிந்தது
இதயங்களின் பண்டமாற்று!
.............................
விடிந்தது வானம்! கலைந்தன கனவுகள்!
என்னருகே நீ யிருந்த வேளையிலே
துக்கங்கள் என் பக்கத்திலும் வரவில்லை!
கண்களும் கண்ணீர் ஆடையை தரிக்கவில்லை!
நலங்கள் மட்டுமே மிகுந் திருந்தன!
அன்றோ உந்தன் புன்னகையில்
மின்னும் பொன்னைக் கண்டேன்!
நடையினில் துள்ளும் மானைக் கண்டேன்!
அன்பினில் உயர்ந்த அன்னையைக் கண்டேன்!
இவை அனைத்துமே இன்று பொய்க்கக் கண்டேன்!
தர்க்கங்கள் எம்மிடையே தாண்டவம் ஆடியதால்
சந்தோஷ ஊற்றுக்கள் சுரந் தெழுந்து
சங்கீதம் பாடிய காலங்கள் எல்லாம்
என்னை விலகி கடந்து செல்ல
கண்ணீர் எந்தன் மேனியை நனைத்தது!
என் நா உன் நாமம் உட்காரும் நாற்காலியாக
துக்கம் குரல் வளையில் குறுக்காய் படுத்துக் கொள்ள
வாய் வழி வெளியேற முடியாதனவாய்
வழியிலேயே வார்த்தைகள் தடுக்கி விழ
பேச வந்த வாக்கியங்களும் முடங்கிப் போயின!
துக்கத்தை தாங்க முடியாது
என்னுள்ளம் கொதி கொதிக்க
தூக்கத்திலும் விழிகளின் விளிம்புகளில்
விழிநீரோ கொதி நீராய் வடிந்தவாறிருக்க
விடிந்தது வானம்! ஆனாலும்
என் கனவுகள் மட்டும் ஏனோ கலைந்து போயின....!!!
..........................................
நம்பிக்கை நீர்!
அவள் விழியோ ஆனந்தப் பாதை!
அதை வர்ணிக்க இல்லை ஒரு மேதை!
அவள் கண்களிலோ கண்ணீர்த் தாரை!
சுவாசிக்க சிறிதேனும் வளியின்றி அவள்
மூக்கு துவண்டு மூச்சிற்காய் அழுதது !
அமைதியை வேண்டி அவளது உள்ளமோ
விழுந் தெழுந்து இறைவனைத் தொழுதது!
அங்க வீனமான அவளது காலடித் தாமரை
தொட்ட தில்லை இத்தரையை!;ஆதலால்
பாவையவள் மனமோ எரிந்தது தீயாகி!
காளையிவன் வந்ததை தாங்கினான் தாயாகி!
நற் றாமரையான அவள் நெஞ்சினிலே
நம்பிக்கை நீரை அவன் வார்த்ததனால்
நங்கையவள் மனமோ உருண்டைப் பந்தாய்
துள்ளித் துள்ளிக் குதித்தது நன்றாய் !
பாலை வனமாக இருந்த அவளது உள்ளமோ
மாலை மாற்ற வந்த இந்த மன்னவனால்
இன்பப் பயிர் விளையும் மருத நிலமானது!
அன்று, பல தடவைகள் விருப்பப் பட்டாள் உயிரை விட!
இன்றோ, அவளுக்கு விருப்பமானது ஒன்றுமில்லை உயிரைவிட!
....................................
அவள் விழியோ ஆனந்தப் பாதை!
அதை வர்ணிக்க இல்லை ஒரு மேதை!
அவள் கண்களிலோ கண்ணீர்த் தாரை!
சுவாசிக்க சிறிதேனும் வளியின்றி அவள்
மூக்கு துவண்டு மூச்சிற்காய் அழுதது !
அமைதியை வேண்டி அவளது உள்ளமோ
விழுந் தெழுந்து இறைவனைத் தொழுதது!
அங்க வீனமான அவளது காலடித் தாமரை
தொட்ட தில்லை இத்தரையை!;ஆதலால்
பாவையவள் மனமோ எரிந்தது தீயாகி!
காளையிவன் வந்ததை தாங்கினான் தாயாகி!
நற் றாமரையான அவள் நெஞ்சினிலே
நம்பிக்கை நீரை அவன் வார்த்ததனால்
நங்கையவள் மனமோ உருண்டைப் பந்தாய்
துள்ளித் துள்ளிக் குதித்தது நன்றாய் !
பாலை வனமாக இருந்த அவளது உள்ளமோ
மாலை மாற்ற வந்த இந்த மன்னவனால்
இன்பப் பயிர் விளையும் மருத நிலமானது!
அன்று, பல தடவைகள் விருப்பப் பட்டாள் உயிரை விட!
இன்றோ, அவளுக்கு விருப்பமானது ஒன்றுமில்லை உயிரைவிட!
....................................
சிதைந்த சிற்பமும் நனைந்த ஓவியமும்!
சூரியப் பந்தின் வீரியக் கதிர் வீச்சை
மேற்கிருந்து வானம் மெல்ல மெல்ல விழுங்க
பரந்து விரிந்த கடலை வான்நிலா
பால் கொண்டு நிரப்ப -உன்
பக்கத்தே நான் வந்து வெட்கத்தில் தலை குனிய
ஈரமணல் மீதென்னைச் சிற்பமாய் நீ வடிக்க
உன் சிந்தனைகள் என்னைச் சிந்து கவி பாடத் தூண்ட
பொங்கி வந்த கடலலையோ
சிற்பமதைச் சிதைத்துச் செல்ல
என் கவிக்கு வந்த கருத்துக்களும்
கருச் சிதைவு பெற்று விட
மனமுடைந்த நானோ
மழை நனைத்த ஓவியமானேன்!
காதல்!
ஒரு நொடிப் பொழுதில் இதயம் ஒருமித்துப் போதல்!
காத்திருந்து காத்திருந்து ஏக்கத்துடன் வாழ்தல்!
கற்பனைக் கடலில் காலமெல்லாம் மூழ்குதல்!
உயிருக்காய் உயிரையும் கொடுக்கத் துடித்தல்!
எவரையும் பயமின்றி எதிர்க்கத் துணிதல்!
ஆயுள் உள்ளவரை அன்பைப் பூஜித்தல்!
எம்மை எமக்கே அடையாளம் காட்டுதல்!
இவற்றுக்கெல்லாம் இன்னொரு பெயர் காதல்!
....................................................
ஊமை அழுகை!
சிட்டொன்று சட்டென்று என்
இதயக் கூண்டிலிருந்து பறந்து விட
இசை பாடித் திரிந்த என் இதயத்தில்
"லப்டப்" இசை வேகமாய் ஒலிக்க
கண்ணீர்த் தடம் மடை பாய
மழையில்லாமல் நனைந்தேன் கண்ணீரில்!
காலம் நம் காதலை வென்றதனால்
இரக்கமற்ற இரவுகளில் நீண்ட தூரப் பயணம்.....
உன் நினைவுகள் என் இதயத்திற்குச் சுமை கொடுக்க
என்னுள்ளம் உனை எண்ணி ஊமையாய் அழ
புகைப் படத்திற் கூட புன்னகைக்க மறந்தேன்!
.....................................................
நினைவுகள்!
நீ என்னை நினைக்க
நான் உன்னை நினைக்க
பெற்றோர் ஏதோ நினைக்க
இறுதியில் எதுவுமே நிறைவேறவில்லை
இறைவன் நினைத்ததைத் தவிர....!
...............................
காதற் சிற்பம்!
உன் வருகை என் இதயக் கல்லை
அழகிய சிற்பமாக்கியதால்
என் கண்ணீர் வெள்ளம்
கானல் நீராயிற்று..
காண முடியாத ஒன்றாய்!
...................
மனமெல்லாம் மார்கழி!
மார்கழிப் பொழுதில் மதி தந்த ஒளியில்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும் அன்புற்ற ஞாபகங்கள்
தித்திக்கும் தேனாய் இன்றும் என் நெஞ்சத்தில்!
வண்டுகள் பூக்களின் தவம் கலைக்க
மழைத்துளிகள் செடிகளின் முகம் உடைக்க
பூ மலிந்த என் பொன் முகம் பார்த்து நீ சிரிக்க
என் மனமெல்லாம் மார்கழி!
தென்றலாய் என் மூச்சை நீ சுவாசிக்க
பாடாத தேநீக்களையும் நாம் பாட வைக்க
உன் காதலுக்கு நானும் என் காதலுக்கு நீயும்
காத்துக் கிடந்த காலமெல்லாம் மார்கழி!
..........................................
உயிர்க் கவிதை!
உன் நினைவுகள் என்
மன வானில் வண்ணப்
பறவைகளாய்ச் சிறகடிக்க
சிந்தனைத் துளிகளை
என் தூரிகைகள் கிறுக்க
அவை என் கவிதைகளுக்குக்
கருக் கொடுத்தன!
என் காதலும் உயிர்க் கவிதையானது!
கனத்த நெஞ்சும் பஞ்சானது!
என் வண்ணக் காதலைக்
கொச்சைப் படுத்தேன்!
கண்ணீரையும் மிச்சப் படுத்தேன்!
...............................................
தவம் செய்தேன் வரமில்லை!
மலர்கின்ற மலர்களெல்லாம்
மாலையில் சேர்வதில்லை!
காதலிக்கும் உள்ளங்களெல்லாம்
கல்யாணத்தில் இணைவதில்லை!
என் விழியில் நீ வீழ்ந்த நாள் முதலாய்
உறக்கம் கொள்ள முடியவில்லை!
தவங்கள் பல செய்து விட்டேன்!
வரமேனோ கிடைக்கவில்லை!
காலங்கள் மாறியது!
மனசு ஏனோ மாறவில்லை!
என்றோ நான் இறந்து விட்டேன்!
என்னில் நீ வாழ்வதனால்
இன்னும் நீ இறக்கவில்லை!
........................
திரும்பாத காதல்!
வற்றாத கற்பனை நதிகள்
என்னைச் சுற்றிக் கொண்டிருக்க
இரவிற்குள் இமைகள் இறங்க
உன்னைப் பற்றிய கனவுகள் நீண்டு சென்றன....
நீண்ட கனவுகளை
அதிகாலைகள் வந்து கலைக்கவுமில்லை.
வெளிச்சம் விலகி வெகு நாட்களாகியதால்
உன்னைச் சுற்றிக் கொண்டிருந்த
என் உலகமும் மங்கலானது!
தொட விரும்பாத் துயரம்
தொட முடியா உயரத்தில் இருப்பதேன்?
திரும்பாத காதலென்று தெரிந்தும்
மனம் ஏனோ திருந்தவில்லை!
என்றோ ஒருநாள் நீ வருவாய்
என்ற ஒரு நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்.... காத்திருப்பேன்...
இன்று..... நாளை.....
ஏன் மரணம் வரைக் கூட......
.....................
உறவிற்காய்த் தோற்ற காதல்!
உள் மனம் உன்னை எண்ணி உருக
வெளிமனம் உன்னை வெறுத்தது கண்டு
அழுதாய் உன்னை நான் வெறுத்தேன் என்று!
அறியவில்லை நீ உன் அழுகை கண்டு-என்
அடி மனம் அனலில் வெந்ததை அன்று!
உன் வாழ்வு சிறக்கவே
உள்ளத்தில் ஆசை கொண்டேன்!
சத்தியமாய்ச் சொல்கின்றேன்
இன்றைக்கும் நானுன்னை
உளமார வெறுக்கவில்லை!
என்ன பாவம் நாம் செய்தோம்
எங்கள் காதல் அன்று தோற்றதற்கு?
உறவுகள் தடை போட்டதனால்
தடை தாண்ட முடியவில்லை!
பெரியோர் சாபம் பொல்லாதது!
உள்ளத்தில் ஐயம் உண்டானது!
உண்மைக் காதல் பொய்யானது!
உளமார அல்ல. உறவுகளுக்காய்!
............................
இறந்தும் இறவாக் காதல்!
எங்கோவொரு மூலையில் இருந்து
அவன் நினைவால் அவள் தவிக்க
என்னையவள் மறந்தாள் என
உறவுகளுக்கு அவனுரைக்க
அதைக் கேட்டு மனங்கலங்கி
பைத்தியமாய் அவள் வாழ்ந்ததை
அவனுக்கு யாரும் கூறவில்லை!
கண்காணா தேசத்தில்
கட்டிய மனைவி பிள்ளைகளுடன்
களிப்புடன் அவன் வாழ்வான் என்று எண்ணி
உள்ளத்தில் அவள் உவகை கொண்டிருக்க
குடிபோதையுடன் தன் காதலியை எண்ணி
கண்ணீருடன் அவன் வாழ்ந்ததை
அவளுக்கு யாரும் கூறவில்லை!
சோகத்தின் காயங்கள்
அவள் உள்ளத்தை வதைக்க
வெளியே சொல்ல முடியாமல் தவித்தாள்!
தினமும் அவள் பூஜித்த காதலனோ
அவள் மனதை வதைத்துப் பிரிந்து விட
ஆற வழி யின்றித் துடித்தாள்!
தூக்கமின்றி பள்ளியறையில்
துக்கமுடன் அவள் வாட
அவனோ நின்மதியாய்
தூங்கி விட்டான் கல்லறையில்
கன்னி யவளைக் கதற விட்டு!
இறைவா என்ன கொடுமை யிது?
இறக்க மற்றவனா கால னவன்?
அவள் இதயத்தில்
அவன் நடந்து போன
நாட்களை எண்ணி அவள் வாட
இடை நடுவே அவளைத் தவிக்க விட்டு
இறந்து விட்டான் அவன்
தன் காதலை மட்டும் வாழ விட்டு!
............................
தூக்கம் கலைந்த துக்கம்!
உயிராய் நீயும் மெய்யாய் நானும்
நெடு நாட்களாய் இணைந் திருந்தோம்!
இரக்கமற்ற காலனவன் உயிரை எடுத்தான்
மெய்யைத் தனியாய் தவிக்கவிட்டு!
மெய்யை எதற்கு விட்டுச் சென்றான்?
பொய்யான வாழ்க்கை வாழ்வதற்கா?
ஊமையாய் நானும் அழ
என் இதயமோ வெம்பி வெடிக்கிறதே!
உன்னை மறக்க நான் முயல
நீயோ தூக்கத்திலும் துக்கத்தைத் தருகின்றாய்!
கனவில் வரும் கண்ணா நீ என்
கண் முன் வந்து நின்று விடு
காணப் பொழுதில் உன் காலடியில்
நான் உயிர் துறப்பேன்!
உன் பிரிவால் என் மனம்
நிலை யில்லாத அலையாய்.....!
உள்ளம் களிப் பிழந்து கலக்கத்தில்....!
சென்ற இடம் சொல்லி விடு
இன்றே நான் வந்து விடுவேன்
சேர்ந் திருப்போம் இரு வருமே!
...............................
கல்லறை உறக்கம்!
கோடை வானமாய்
வெளிறிக் கிடந்த என் மனதில்
உன் பிரவேசம் ஒரு
கார் காலத்தைப் பிரசவித்தது அன்று!
இன்றோ, உன் இழப்பு என்
கனவுகளைக் கலைத்து விட
உன் பிரிவின் பின் வந்த நாட்கள்
இருளைச் சமர்ப்பித்துச் செல்ல
கன்னங்களில் நரையும்
முதுமையின் முனகலும் மிஞ்சி யிருக்க
வருத்தத்தோடு வானத்தைப் பார்த்தேன்!
தம்மோடு ஒரு புதிய நட்சத்திரத்தை
சேர்த்துக் கொண்ட களிப்பில்
நீண்ட கரு வானத்தில் மின்னிய நட்சத்திரங்கள்
என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தன.....!
எல்லாமே பொய்யாக கல்லறை மீது
உன் உறக்கம் மட்டுமே மெய்யானது!!!
.......................................
கல்யாணப் பிச்சை!
ஆகாய மங்கை சூரிய அடுப்பை
ஊதி அணைக்க ஆரம்பித்த வேளையிலே
அழைத்தாய் என்னை ஆற்றோரம் கதை பேச!
பால் நிலா வெளிச்சம் தர
தென்றல் காற்று இதமாய் வீச
உன்னுடன் கூடி உலாவரும் வேளையிலே
பட்டுப் போன்ற என் கரங்களை
பட்டென நீ பற்றிக் கொள்கையிலே
பட்டாம் பூச்சிபோல் என்னுள்ளம் பட படக்கும்!
விழிகள் இரண்டும் மொழிகள் பேச
வெளிவந்த வார்த்தைகள் தடம் புரள
தென்றலாய் நீ என்னருகில் நெருங்கும் போது
காதல் தீயில் என்னுள்ளம் கொதி கொதிக்கும்!
உன் காதல் மொழிகளை எல்லாம்
பக்குவமாய் என் இதயப் புத்தகத்தில்
எழுதி வைத்தேன்! என்றோ ஒருநாள் நீ அதைப்
புரட்டிப் பார்ப்பாய் என்ற நம்பிக்கையில்!
உன் விழி அம்புகளால் உடைக்கப்பட்ட
என் மனப் பாத்திரத்தை
பக்குவமாய் பொருத்தி வைத்து
பிச்சைக் காரியைப் போல் காத்துக் கிடந்தேன்
உன் கல்யாணப் பிச்சைக்காய்!
இறுதியில் பிச்சையும் எனக்கில்லை!
பாத்திரமும் என்னிடமில்லை!
நான் மட்டும் தெருவிலே!
என்னை நானே அடையாளம் காணமுடியாமல்!
.......................
காதல் அபராதம்!
மேனி நொந்து போய் நின்றேன்!
மேகங்களைத் தூது விட்டேன்!
மெய்யான நம் காதல்
பொய்யானதை நான் அறியாமல்!
உள்ளத்தில் உன்னை வைத்தேன்!
உலகமே நீ என்றேன்!
உள்ளத்தில் இன்னொருத்தி
உள்ளதை நீ ஏன் உரைக்கவில்லை!
புன்னகையால் பூவை என்னை
பூட்டி வைத்தாய் இதயந்தனில்!
புன்னகைக்க ஏன் மறுத்தாய்
பூவை ஒருத்தியை மணந்த பின்னர்!
சீதனமே வேண்டாம் என்றாய்!
சீதை நீயே வேண்டும் என்றாய்!
சீதணத்தால் நம் காதலை நீ ஏன்
சீரழித்து விட்டுச் சென்றாய்!
உன் செவ்வையக் கண்டதுமே
என் செவ்வாய் தோசம் மறந்தேன் என்றாய்!
செவ்வாயை மனிதன் வென்று விட்டான்!
நீ ஏன் செவ்வாயில் குற்றம் கண்டாய்!
மணமாலை சூட்டி விட்டாய்! என்
மனதை நீ வாட்டி விட்டாய்! உன்
மணமாலை வாட முன்னர்
வாடியதே என் மனது!
உன் காலடியில் வீழ்ந்து
நான் கேட்கின்றேன் வரமொன்று!
உனக்கு வாழ்க்கைப் பட்ட வஞ்சிமலரை
வாடாமல் காத்து விடு!
காதலித்த குற்றத்திற்காய்
அபராதம் கேட்கின்றேன்
அதை வரமாய் நீ தந்து விடு!
உனைக் கை கூப்பி வணங்கிடுவேன்!
......................
காதலும் வாழ்வும்!
அழகிய பூவை அனுபவிக்கத் துடித்தது
வண்ணத்துப் பூச்சி!
காதல் கொண்ட காற்றோ காப்பாற்றியது!
காதல் மட்டும் இங்கே இல்லை என்றால்
வாழ்க்கை என்பது யாவர்க்கும் சூனியமே!
...........................................
"வலிமைமிக்க அன்புள்ளம் வலியையும் ஏற்கும்!"
உன்னை எண்ணும் போது
எந்தன் நெஞ்சில் ஏக்கம் வரும்!
அந்த நொடி முதலாய்
கண்கள் இரண்டில் தூக்கம் கெடும்!
உந்தனுக்கே என்னைத் தர ஆசை வரும்!
துன்பம் வந்த போதும்
உந்தன் நினைவு
எந்தன் நெஞ்சை வாட்டும்!
புண்களைத் தந்து விட்டு
பூவால் நீ வருடினாலும்
மனமெல்லாம் திரையிட்டு
மௌனமாய் இருக்கத் தோன்றும்!
உனக்காக இழந்தவை
ஒரு கோடி ஆனாலும்
எனக்கான இதயத்தில் உன்
இதயத்தைச் சுமக்கத் தோன்றும்!
எந்தன் வலிமை மிக்க அன்புள்ளம்
நீ தரும் வலிகளையும் விரும்பி ஏற்கும்!!!
....................................................
வருவாயோ என் தேவதையே! (பாடல்)
இதயம் திருடிச் சென்றவளே!
என்னிடம் திரும்பி வருவாயே!
காத்திருப்பேன் உனக்காய்!
காலமெல்லாம் உன் நினைவுடனே!
வருவாயோ என் தேவதையே!
நெஞ்சில் நிறைந்து நிற்பவளே!
கடவுள் தந்த பொக்கிஷமே! என்
கையில் கிடைத்த காவியமே!
கண்களில் நீ உறங்குவதால்
கனவிலும் நான் விழித்துள்ளேன்!
முழுமதியே எந்தன் மார்பினிலே
மழலையாய் உன்னைத் தாங்கிடுவேன்!
வருவாயோ என் தேவதையே!
நெஞ்சில் நிறைந்து நிற்பவளே!
என் இதயம் தொலைந்து விட்டதடி!
அதை எடுத்த பாவை நீதானடி!
இன்னொருத்திக்கு கொடுப்பதற்கு என்னிடம்
இரு இதயங்கள் இல்லையடி!
தேவதையே உன் வருகைக்காய்
திறந்திருக்கும் என் இதய வாசலடி!
வருவாயோ என் தேவதையே!
நெஞ்சில் நிறைந்து நிற்பவளே!
கன்னத்தோடு உன்னைச் சேர்த்து
கட்டியணைக்க ஆசையடி!
காதல் என்பது ஒரு முறைதான்
வருவதென்பது உண்மையடி!
கண்ணுறங்க முடியவில்லை!
கனவுலகில் பறக்கின்றேன்!
வருவாயோ என் தேவதையே!
நெஞ்சில் நிறைந்து நிற்பவளே!
............................................
அவளுக்குள் அவன்!
என்னைத் திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
உன்னில் விளக்கேற்றி
உன் வாழ்விற்கு ஒழி தந்து
வாழ வைப்பேன் உன்னை என்று
விளக்கங்கள் தந்தவன் எங்கே என
வினவி நின்றாள் விடை காண முடியாமல்!
காதலிக்க நாதி அற்றவள்
காதலிற்காய் தன்னை இழந்து
வீணாய்ப் போன காதலில்
வீழ்ந்தது கொடுமை என்று
வீழ்ந்தது கொடுமை என்று
கண் கலங்கித் துடித்தாள்!
கடவுள் கூட இரங்கவில்லை!
என்னை நான் தொலைத்து விட்டேன்!
தொலைந்த இடம் நீ அறிவாய்!
உனக்குள்ளே தேடிப் பார்!
உண்மையாக என்னைக் காண்பாய் என
காதலனிடம் கூறி நின்றாள்!
கண்ணீரைப் பரிசாகக் கொடுத்தான்!
தன்னையே மறந்தாள்!
நின்மதியைத் தொலைத்தாள்!
அன்று அவனை சந்தித்ததால்.....!
.........................
நீ வருவாயோ!
என்னவனே! என் மனத்தைக்
கொள்ளை கொண்ட மன்னவனே!
எனைப் பிரிந்து எங்கேதான் சென்றாயோ!
ஜமுனை நதிக் கரையினிலே
உன் வருகைக்காய் காத்திருந்து
ஏங்கி அழும் ராதையாக நா னிருந்தால்
கீதம் இசைக்க கண்ணனாக நீ வருவாயோ!
இன்றேல்,
இராவணனது சிறையினிலே வதைபடும்
சீதையாக நா னிருந்தால்
எனைக் காக்க இராமனாக நீ வருவாயோ!
உனைச் சந்தித்த வேளையிலே
மகிழ்வுற்ற என் மனமோ-இன்று
தினம் தினமும் உன் நினைவால்
தவிக்குதடா உன் பிரிவால்!
உன் நினைவுகளைச் சுமந்து நோகும்
என் மன வலியைப் போக்கிட மாட்டாயோ!
.............................................
.............................................
பாலைவன பசும் மரம்!
கண்ணா நீ எந்தன் காதோரம் தான் வந்து
காதல் கவிகள் பாடாயோ என
கண்மணி நான் காத்திருந்தேன்
கண்மணிகள் நீர் பொழிய!
கண்ணா நீ எந்தன் காதோரம் தான் வந்து
காதல் கவிகள் பாடாயோ என
கண்மணி நான் காத்திருந்தேன்
கண்மணிகள் நீர் பொழிய!
எங்கிருந்தோ வந்து எந்தன்
உள்ளத்திலே நீ புகுந்ததனால்
ஏங்கித்தானே நின்றேன் நான்
உன் நினைவாலே நாளெல்லாம்!
எந்தன் இதயத்திலே சங்கமித்தால்
உதயமாகவே நீ இருப்பாய் என
உருகித்தானே நின்றேன் நான்
உன் நினைவாலே பொழுதெல்லாம்!
அனைவருக்குமே இவ் வுலகில்
அழகிய மலராக ஆகும் காதல்
எமக்கு மட்டும் ஏன் தானோ
கொடிய முள்ளாக போனதடா !
பாலை வனத்திலே -பசும்
மரம் ஒன்று முளைத்ததைப் போலே
பாவை என் மனதினிலே
பசுமையாய் நீ வந்து புகுந்தாய்!
பகலிரவென நித்தமும் எந்தன்
நெஞ்சமதில் வந்து நின்றாய்!-இன்று
பஞ்சாய் ஏன் பறந்து சென்றாய்
பாவை என்னை ஏன் தவிக்க விட்டாய்!
......................
காலம் கடந்த காதல்!
நிலவின் ஒளியை விரும்பாது
பார்வையைத் திருப்பிக் கொள்ளும் சிலரைப் போல்
காதல் வெளிச்சத்தைப் பார்க்க விரும்பாது
என் பார்வையை மறுகரைக்கு திருப்பினேன்!
விழிகள் தம்மை பாதுகாக்கும்
இமைகளை பார்த்ததேயில்லை!
இமைகளை பார்த்ததேயில்லை!
இரு விழிகள் இருப்பினும் அவை
ஒரே திசையை பார்ப்பதைப் போலவே
என் இரு விழிகளும் உன்னையே தேடுகின்றன!
விழிகளால் என்னை அன்று
காதல் வலையில் வீழ்த்தினாய்!
இன்றோ என் விழியோரம் விழுகின்றன
துளிகள் உன் பிரிவினைத் தாங்க முடியாது!
சிறகு நனைந்த பறவைக்கு தன்
சிறகுகளே சுமையாக இருப்பதைப் போல்
எனக்கு நானே சுமையானேன்
என்னை விட்டு நீ பிரிந்ததனால்!
உன் அருகாமை கிடைக்காது
தனிமையை உணரும் வேளைகளில்
வானத்தை துணைக்கு அழைத்து
என்னை இரண்டறக் கலக்கின்றேன்!
பௌர்ணமி நிலா கண்ணிமைப் பொழுதிலே
தேய்ந்து விடுவதைப் போலே
உன் காதல் என்னை விட்டுப் பிரிந்ததனாலே
நானும் இங்கே தேய்கின்றேனே!
வானத்து நிலவை பார்த்து
எனக்குள் நானே பொறாமைப் படுகின்றேன்!
எத்தனை நட்சத்திரக் காதலர்கள்
அதை சுற்றி வலம் வருகின்றன!
கிடைத்த கனியை ருசிக்கத் தெரியாமல்
அதை தவறவிட்டு வருந்துகின்றேன்!
மரணத்தின் பின் மனிதத்தை போற்றும் ஒருவராய்
உன் மரணத்தின் பின் போற்றுகின்றேன் உன் காதலை!
..............................................
விடியலைக் காட்டிய விழிகள் எங்கே!
ஆழ்ந்து உறங்கும் வேளைகளில்
ஆருயிரே என் உயிரை ஏன் வதைக்கின்றாய்!
நித்தமும் என்னை வதைக்காதே!
நிரந்தரமாய் என்னை தந்திடவா!
விடி வெள்ளி உன்னைக் காண்பதற்கு முதல்
விடிவு தெரியாது நான் விழித்தேன்!
விடிவைக் காட்டிய உன் விழிகள்-இன்று
நிரந்தரமாய் உறங்கியதேனோ!
உன் இழப்பு என் இதயத்திற் குள்ளே
இடி மின்னலாய் மோதி மழையுடனே
உன் பிரிவின் துயரும் இறங்கியதே
எந்தன் இதயத்தி னுள்ளே!
விடியும் பொழுதில் வீசும் தென்றலுடன்
என் சுவாசமும் சேர்ந்து கலக்க
என் இதய வாசலிற்கு வராத உன் வருகைக்காக
காத்திருக்கின்றேன் கண்களில் எக்கமுடனே!
......................................................
சாதியும் நீதியும்!
புலர்ந்தது பொழுது! மண்ணில்
விழுந்தது வெளிச்ச விழுது!
புள்ளினம் மகிழ்ந்து வழங்கிடு கானம்
செவியினுள் நுழைந்து இனித்தது தேனாய்!
கையும் நடுங்க மெய்யும் நடுங்க
வெயிலில் கூட வேர்க்காத என் தேகம்
முதன் முதலாய் வேர்த் தொழுக-முன்னர்
ஒருபோதும் பார்க்காத துயரங்களை
விழிகள் முதன்முதலாய் பார்த்து வியக்க
விம்மி விம்மி அழுதேன் விலா எலும்பு நோக!
காதலுக்கேது சாதியும் நீதியுமெனக் கூறிய நீயே
பாசநூலை வீசி மோச வலை நெய்தாயே!
நேசமுடனுனை நெருங்கி வந்த வேளையிலே
நத்தையே உனக்கேனிந்த நாலுகால் பாய்ச்சலென
என்னோடு ஏன் வாதித்தாய்? என்னை ஏன் சோதித்தாய்?
நாடி வந்தவர்தம் குறை நிறை பார்த்தா
மண்ணில் மர மது நிழலைத் தருகிறது?
நேசம் உன் மேல் வைத்த என்னை
அனல் நெருப்பாய் இன்று நீ சுட்டதனால்
விழி நீர் எந்தன் கன்னங்களில் வழி நீராகியதே!!
புலர்ந்தது பொழுது! மண்ணில்
விழுந்தது வெளிச்ச விழுது!
புள்ளினம் மகிழ்ந்து வழங்கிடு கானம்
செவியினுள் நுழைந்து இனித்தது தேனாய்!
கையும் நடுங்க மெய்யும் நடுங்க
வெயிலில் கூட வேர்க்காத என் தேகம்
முதன் முதலாய் வேர்த் தொழுக-முன்னர்
ஒருபோதும் பார்க்காத துயரங்களை
விழிகள் முதன்முதலாய் பார்த்து வியக்க
விம்மி விம்மி அழுதேன் விலா எலும்பு நோக!
காதலுக்கேது சாதியும் நீதியுமெனக் கூறிய நீயே
பாசநூலை வீசி மோச வலை நெய்தாயே!
நேசமுடனுனை நெருங்கி வந்த வேளையிலே
நத்தையே உனக்கேனிந்த நாலுகால் பாய்ச்சலென
என்னோடு ஏன் வாதித்தாய்? என்னை ஏன் சோதித்தாய்?
நாடி வந்தவர்தம் குறை நிறை பார்த்தா
மண்ணில் மர மது நிழலைத் தருகிறது?
நேசம் உன் மேல் வைத்த என்னை
அனல் நெருப்பாய் இன்று நீ சுட்டதனால்
விழி நீர் எந்தன் கன்னங்களில் வழி நீராகியதே!!
..........................................
ஏக்கம்!
பல காலம் உனக்காக
காத்திருந்த எந்தனுக்கு
முகத்தை மட்டும் காட்டி விட்டு
முடிவைக் கூற மறுத்து
வானத்து வெண்ணிலவாய் நீ
துார தேசம் சென்றதனால்
துாக்கப் பிரதேசம்
தொடரந்து கனவுகளாற் தாக்கப்பட
என் விழி நீர்க் குளத்தில்
வீழ்ந்து கரைந்தன ஏக்க மிச்சங்கள்!
...................................
“பருவ நிலா!”
கரு நீல விழி சிமிட்டி
பளிங்கு முகம் காட்டும்
பருவ நிலா இவளன்றோ!
தாரகைகள் நடுவினிலே
தண்மதியென ஒளிருமிவள்
தாகம் கொண்ட பூமிக்கு
மேகம் தந்த மழைதானோ!
தேய்நிலா பிறை நுதலும்
தேடும் இரு விழியும்
தேன்கன்னக் குழியழகும்
தேவதையாள் தனியழகே!
பொதிகைமலைத் தென்றலிவள்
பூவிதழ் தெருவினிலே
புறப்பட்டு வந்தனவே
முத்துத் தேர் புன்னகைகள்!
கருங் கூட்ட முகிலிடையே
கடைக்கண் பார்வையினால்
காரிகையாள் தேடுகின்றாள்
காணாத கண்ணாளனையே!