நோர்வே ரதீஜா பிலிம்ஸ்
எங்கள் வாழ்த்துரைகள்!
கலை என்ற இனிய சோலைக்குள் எத்தனை எத்தனை இனிய கனிகள் !கலைவாணியின் படிப்புத்தான் இந்த கலைச்சோலை! இந்த சோலைக்குள் காய்த்த கனிகளில் ஒன்றுதான் கவிக்கனி! கலைவாணியின் அருள் பெற்றவர்களால்தான் கவி வடிக்க முடியும். பெண் குலத்திற்கே பெருமை தேடிக் கொடுக்கும் கவிப்புயல்தான் கவிச்செல்வி இந்த பொன்மகளாகிய பொன்.சிவகௌரி.கல்லூரி மேடைகள் எல்லாம் இவர் கவியைச் சொல்லும். பெண் குலத்தின் அடிமை விலங்கறுக்க புறப்பட்ட பெண் புயல்தான் இவர். இந்த கவி மங்கை கவி கேட்டு பனிப் பூக்கள் கூட நிமிர்ந்து மலர்ந்து தலையாட்டும். அடுப்பங்கரைதான் பெண்ணுக்கு சொந்தமல்ல பெண்ணால் முடியாதது என்று யாதுமில்லை என்ற சொல்லுக்கு இலக்கணம் இவர் கலைப் படைப்புக்கள் என்றே கூறலாம். கவி வடிப்பதென்பது ஒரு சாதாரண செயலல்ல. ஒரு கதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு கவிதையை எடுதுவதென்றால் எவ்வளவு கற்பனை வேண்டும்! அந்தத் தனியொரு மதிப்பை ஏற்படுத்தியுள்ளவர்களில் இவரும் ஒருவர். சோலைக்குள் பாடும் குயில்களுக்கெல்லாம் இவர்கள் வரிகள் இல்லையென்றால் ஏது பாடும். இவர் எழுத்து துறையில் பல பல பரிசில்களைப் பெற்று வெற்றி ஈட்டியவர்! இக் கவித்தொகுப்பு பெண்ணினத்திற்கே ஒரு விளிப்புணர்வையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமேயில்லை! கவித்தொகுப்பு வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்று சிறப்படைய வாழ்த்துகின்றோம்!
இப்படிக்கு
இயக்குனர்
அன்பு
A.பாஸ்கர்.
(காலம் சென்ற இயக்குனர் பாஸ்கர் அவர்கள் அன்பாக எனக்கு எழுதி அனுப்பிய வாழ்த்துரையை இங்கே பதிவு செய்வதில் மகிழ்வடைகின்றேன்)
(காலம் சென்ற இயக்குனர் பாஸ்கர் அவர்கள் அன்பாக எனக்கு எழுதி அனுப்பிய வாழ்த்துரையை இங்கே பதிவு செய்வதில் மகிழ்வடைகின்றேன்)
No comments:
Post a Comment