சிந்தனைச் சிதறல்கள்!




*உண்மைக்காக எதையம் தியாகம் செய்யலாம். ஆனால்,
  எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது!

*பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல.
   கட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு!

* புகையிலையில் பற்று வைத்தால் அது நெஞ்சில்
  புற்று வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்!

 * நாம் எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கிறோமோ,
   அங்கே நமக்காக ஏமாற்றங்களும் காத்திருக்கும்!

* விட்டுக்கொடுக்க நினைப்பவன் கெட்டுப் போவதில்லை!
   கெட்டுப்போக நினைப்பவன் விட்டுக் கொடுப்பதில்லை!

* மனைவி, உனக்காக எதையும் இழப்பாள்!
  எதற்காகவும் உன்னை இழக்க மாட்டாள்!

* இளமையும் அன்பும் வசந்தகாலப் பரிசு!
  அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்!

* மறுமணம் என்பது வாழ்க்கையை இழந்தவருக்கே!
   வாழ்க்கையை துறந்தவருக்கல்ல!

* பிரச்சனையை சந்தோசமாகக் கதைத்துத் தீர்க்க மறுத்து
   சட்டத்தை நாடுபவர் மடையர்!

* திருமணத்தின் பின் தனிக்குடித்தனம் மணம் வீசும்!
  அதற்கு முதலெனில் நாறி விடும்!

* பாசம் அளவுக்கு மிஞ்சி, மனைவியை சந்தேகிக்க   முன்  
  மனைவி உன்னைச் சந்தேகித்தால்
  எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்!                    

* நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும் ஆபத்து!
   விலகி இருந்த எதிரி நெருங்கி வந்தாலும் ஆபத்து!

* தான் பெற்ற செல்வங்களுக்கு தாமாகவே உணர்ந்து
   தாய்ப்பாலை ஊட்டுவதுதே உண்மையான தாய்மை!

* சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை!
   சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை!

* நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக் கொள்!
   உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக் கொள்!

* மனச்சாட்சிக்கு மேலானதொரு சாட்சி இல்லை!
  அதை மதிக்காவிட்டால் உனக்கு ஆட்சி இல்லை!

* உன்னைப் பழி தீர்த்த ஒருவனை
   நீ பழிவாங்க முயன்றால்
   இறை தர்மத்தின் தண்டனை
   இருவருக்கும் சமமாகவே இருக்கும்!

* அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்!
   ஆனால் முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்!

* காதலுக்குரிய கண்ணினை யொத்த
   மாதருக் குரிமை மறுப்பவர் மடையர்!

*பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்
  உன் சிறப்புக்களை ஊர் புகழும்!

*உண்மையைச் சொல்லுங்கள்!
  உண்மையாய்ச் சொல்லுங்கள்!

*பாதி உலகம் அறியாமையினால் துன்புறுகிறது!
  மீதி உலகம் புத்திசாலித்தனத்தால் துன்புறுகிறது!

* நீ நிலைத்து நிற்க வேண்டும் என்றால்
  ஓடிக்கொண்டே இரு!

* எவரும் தோற்பதற்குத் திட்ட மிடுவதில்லை!
  திட்ட மிடுவதில்தான் தோற்கிறார்கள்!

* ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல!
   வீழ்ந்த பொழுதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை!

* இறைவன் பாவங்களை எல்லாம் மன்னிக்கின்றார்!
   அதனால்தான் சொர்க்கம் காலியாக இருப்பதில்லை!

* நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்
   நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?

* குற்றத்தை ஒப்புக் கொண்டாலே
   பாதி மன்னிபுக் கிடைத்து விடும்!

* கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன்
  திண்ணியராக எண்ணியதை முடிப்போம்!

* உங்களது தப்பிற்கு மனச்சாட்சி கூட இல்லாவிடினும்
   உங்களது ஜாதகம் சாட்சி சொல்லும்!

* இதயம் ரோஜா மலராக இருந்தால்
   பேச்சில் அதன் நறுமணம் தெரியும்!

* காதலியை மனைவியாக்கத் துணிவு தேவை!
   மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!

* துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு!
  ஆனால், அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!

* வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும்!
   வாழ்விலும் பொருள் வேண்டும்!

* ஒவ்வொரு சிறந்த நண்பனும்
  ஒரு நேரம் அந்நியனாக இருந்தவன்தான்!

* வாழ்வதற்காக வேலை செய்யுங்கள்!
   வேலை செய்வதற்காக வாழாதீர்கள்!

* மற்றவர்களை மரியாதையாக நடத்தியதால்
   நஸ்டமடைந்தவர்கள்  எவருமில்லை!

* உண்மையான பெரிய மனிதருக்கு
   முதல் அடையாளம் பணிவாக இருத்தல்!

* அலுவல் முடிக்க அடிக்கடி வருவார்!
   அலுவல் முடிந்த பின் அடிக்கவும் வருவார்!

* பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்!
   பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!

* காளையர்க்கு காதல் அரசியல் மாதிரி!
  காதலியைச் சுற்றிப் பார்க்கலாமே தவிர
  தொட்டுப் பார்க்கக் கூடாது!

* ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
   என்ற வாழ்வை இன்னும் காணோம்!

* நல்லவர்கள் உதவி செய்தேன் என்று சொல்ல மாட்டார்கள்!
   உதவி செய்தேன் என்று சொல்பவர்கள் நல்லவரல்ல!

* கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்!
  முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!

* அன்பு செலுத்துபவனை அடக்கி ஆழ முடியாது!
   ஆனால், அடக்கி ஆழ்பவனையும் அன்பினால் வெல்லலாம்!

* பிராத்தனை உங்கள் நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது!
   நம்பிக்கைதான் உங்கள் பிராத்தனைக்கு உயிர் கொடுக்கும்!

* மனிதன்  வெட்டும் போது   ஆட்டின் இதயம் துடிக்கிறது!
   அதன் கொலோஸ்ரோலால் மனித இதயம் வலிக்கிறது!

* தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை
   வேறு யாரும் காப்பாற்ற முடியாது!


* எளிதானதை சிக்கலாக்குவது எழிது.
   ஆனால் சிக்கலானதை எளிதாக்குவதோ சிக்கல்!

* பணிவாக நடந்து கொள்வது
  மேலதிகாரிகளிடம் எனில் கடமை!
  சமமானவர்களிடம் எனில் பண்பாடு!
  கீழானவர்களிடம் எனில் பெருந்தன்மை!

* காதல் என்பது பரீட்சை மாதிரி இல்லை.
   ஒரு தடவை fail ஆனால் மறு தடவை எழுதி pass பண்ணுவதற்கு!

* அன்னையை எவரோடும் ஒப்பிடக் கூடாது!
   அவள் ஈடற்றவள்!

* நீ துணிந்தவனாக இருந்தால்
   தோல்வி கூட உன்னைக் கண்டு அஞ்சும்!


* சுதந்திரம் ஒருவகைச் செருக்கு.
   அதில் தந்திரம் சேர்ந்தால் அது வாழ்வின் சுருக்கு!

 *  இறைவன் ஒவ்வொரு உயிரினோடும்
     உடன் பிறக்க முடியாது என்பதற்காக   
     தாயை தன் பிரதிநிதியாக அனுப்பி வைக்கிறான்!

*  மனைவியும் கொம்பியூட்டரும் பயன்பாட்டில் ஒன்று.
    புரிந்து கொண்டால் சொர்க்கம். இல்லை என்றால் நரகம்!

*  பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல.
    உயர்ந்த பண்பின் அறிகுறி!

*  தவறு செய்ததால் ஏற்படும் மன உளைச்சலை விட
   அதற்கு மன்னிப்புக் கேட்பதால் ஏற்படும்
   மன நிறைவு உயர்வானது!

*  எல்லோரிடத்திலும் தெய்வம் உண்டு!
   ஆனால் எல்லோரும் தெய்வத்திடம் இல்லை!

*  முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம்.
    புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!

************************************