கவித்தாகம் கொண்டவர்!
அவர் எளிய கவிகளுக்குள்
அவரின் மானிட நேசம்
சிறு பொறியாக எழுந்து
பெரு நெருப்பாய் முளைப்பதைக் காணலாம்.
இவர் இளைய தலைமுரையினருக்குள்
ஈழம் தந்த கவிச் செல்வம்!
புலம் பெயர் தேசத்தில் இருந்து
நோக்கும் தாய் மண்ணை நேசிக்கும்
தாய் நெஞ்சம் கொண்டு கவி வாசிக்கும்
கன்னித் தமிழிச்சி!
தங்கக் காசு நோக்கும் சந்தைப் பொருளாதாரத்திலும்
ஊன மனிதரிடையேயும் இதோ
மானிடக் காலூன்றி
மனித முகம் தாங்கி
கவிக் கண்ணோடு வரும்
கௌரியைக் காண்கின்றேன்!
எம் ஈழத் தங்கக் கட்டி
பொங்கும் உணர்வோடு
தாய் நாட்டின் நோயில் உருகுவதை
எண்ணிப் பார்த்தால்....
அவர் தொடுக்கும் கவிகள் கேட்டால்....
எம் தாயக கலாச்சாரம்
புலம்பெயர் தேசத்தில் கருக்கப் படுவதை எண்ணி
வேதனையோடு குமுறுகின்றார்!
கவிக்கென்ன கட்டுப்பாடு?
அன்பு தட்டுப் பாடா?
அங்கேது கவிதை?
ஆரவார மொழியால் பிரயோசனமேது?
இங்கே தன் அன்பு மொழியில்
தன் உணர்வுகளைப் பதிவு செய்கின்றார்.
கவிக்கு என்ன இலக்கணம் வேண்டும் இதைத் தவிர?
இவர் கவனிக்கப் பட வேண்டிய
கௌரவிக்கப் பட வேண்டிய
தாற்காலக் கவிச் செல்வம்....
வாழ்த்த வேண்டும்
நம் நாட்டிற்குக் கவி பாடும்
நற்கவி நெஞ்சங்களை.
இவர்கள் இறை தூதர்கள்.
நாளும் தம் மனதில்
சொற்கள் தேடித் தவமிருந்து
தலைக்குள் தீ வளர்க்கும் பிரம்மாக்கள்!
சகோதரி கௌரி
வாழ்க!
வளர்க!
கவிக் கனி கொண்டு எழுக!
அன்புடன்
யாழ்.க.நடராஜ்
(விண்ணவன்)
அன்னை கலைக்கழகம்
(தலைவர்,ஸ்தாபகர்)
Annai Kalaikkazhakam
Kolkakkerweg 21-2
6706 GK Wageningen
The Netherlands
http:yknataraj.freehomepage.com
ohmnld@netscape.net
0031 (0) 317 424044
No comments:
Post a Comment